தேவையான பொருட்கள்:
வெந்தயம் - மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
பெரிய வெங்காயம் - ஒன்று
தாளிக்கும் கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
புளி - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- புளியை மூன்று டம்ளர் சுடு நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காயிந்ததும் கடுகு போட்டு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்க்கணும்.
- கடலை பருப்பு சிவந்ததும் பெருங்காயத்தை பொரிய விடனும்.
- வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கணும்.
- வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கணும்.
- உப்பு சேர்த்து கொதிக்க விடனும்.
- நன்றாக கொதித்து எண்ணெய் குழம்பின் மேல் தெரிந்தவுடன் இறக்கவும்.
*பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் அல்லது முருங்கைக்காய்சேர்த்தும் செய்யலாம்.
*வெந்தயத்தை கருகாமல் கவனமாக வதக்க வேண்டும் இல்லாவிட்டால் ருசி மாறிவிடும்.
*இந்த குறிப்பிட்ட குழம்பிற்கு கீரை மசியல் மிக நன்றாக இருக்கும்.
*இந்த குழம்பிற்கு பொடிகள் எதுவும் சேர்க்க கூடாது.


