புதன், 12 நவம்பர், 2014

மொறு...மொறு அடை மொறு...மொறு அடை



தேவையான பொருட்கள்
---------------------------------

அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
உளுத்தம் பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூ
ன்
பாசி பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மிளக்காய் வற்றல் - 11
மிளகு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் பல் - மூன்று டேபிள்ஸ்பூன்(விரு
ப்பபட்டால்)
செய்முறை:
----------------
*அரிசி ,மிளகாய் வற்றல் மற்றும் பருப்புக
ள் அனைத்தையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
*ஒரு மணி நேரம் அரைத்ததை வைத்து விட்டு பின்பு தேங்காய் பல்(சில்) சிறிதாக நறுக்கியது ,பொறியாக நருக்கிய கறிவேப்பிலை , ஒன்றிரண்டாக பொடித்த மிளகு ,உப்பு எல்லாவற்றையும் சேர்த்
து நன்கு கலக்கவும்.
*தோசைக்கல்லை சூடேற்றி ஒரு கரண்டி மாவு எடுத்து மெலிதாக தேய்த்து ஒரு டீஸ்பூன் ஆயில் விடவும் .
*நன்கு மொறு மொறுப்பாக ஆனதும் திருப்பி போடவும்.
*இரண்டு பக்கமும் நன்றாக வெந்து மொறு மொருப்பானவுடன் எடுத்து தக்காளி சாஸ் அல்லது எந்த வித சட்னி சாம்பா
ர் கூடவும் சாப்பிடலாம்.
*அடை ரெடி.