திங்கள், 20 அக்டோபர், 2014

சாம்பார்/குழம்பு பொடி




தேவையான பொருட்கள்:
=======================
தனியா - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - எட்டு(காரத்திற்கு தகுந்தார்ப்போல்)
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் தூள்  - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து (தேவைப்பட்டால்)
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் 

செய்முறை:
============

* ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவைத்து பருப்பு வகைகளை முதலில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

* பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

* நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்து பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு  மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.

* மணக்கும் சாம்பார் பொடி தயார்..இதை பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

 இந்த பொடியின் குறிப்பு ஒரு பிரபல உணவகத்திலிருந்து வாங்கியது..குழம்பு மிக சுவையுடன் வருகிறது..ஆகவே அனைவரும் ஒரு முறை இதே அளவில் பொருட்கள் சேர்த்து செய்து பாருங்கள்..