தேவையான பொருள்கள்:===========================அவல் - ஒரு கப்பச்சை மிளகாய் - மூன்றுஉளுந்து பொடி - இரண்டு டேபிள்ஸ்பூன் பிரட் கிராம்ஸ் - வடை உருட்டஇஞ்சி - ஒரு துண்டுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
செய்முறை:=============
- அவலை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
- உளுந்தை பச்சையாக பொடித்து உளுத்தம்பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
- மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
- இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
- அவலை அரைத்து எடுத்து அதில் இப்பொடியை சேர்த்து மிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசிந்து வைத்துக்கொள்ளவும்.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிரட் கிராம்ஸ்ஸில் பிரட்டி வைக்கவும்.
- எண்ணெயை சூடாக்கவும்.
- சூடான எண்ணெய்யில் உருட்டிய உருண்டைகளை போட்டு பொறித்து எடுக்கவும்.
தேவையான பொருட்கள்:*****************************நருக்கிய பிரட் துண்டுகள் - ஒரு கப்பால் - ஒரு கப்முந்திரி - பத்துநெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்சர்க்கரை - அரை கப்செய்முறை:**************# முதலில் பிரட் துண்டுகளில் பாலை விட்டு முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் ஊற வைத்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.# அரைத்த கலவையை ஹல்வா கிளரும் பாத்திரத்தில் விட்டு மிதமான தீயில் நன்கு கிளறவும்.# இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.சர்க்கரை சேர்த்து கிளறவும்.# சர்க்கரை கரைந்ததும் எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதி நெய்யை ஊற்றவும்.# எல்லாம் ஒன்று சேருமாறு கிளறவும்.நன்கு அழுத்தி தொடர்ந்து கிளறவும்இல்லை என்றால் அடிபிடித்துவிடும்.# ஒரு நிமிடத்தில் மீதம் உள்ள நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் வேண்டும் என்கிற வடிவத்தில் வைத்து பரிமாறவும்.# இந்த ஹல்வா எளிதில் தாயரித்து விடலாம்.மிக சுவையாக இருக்கும்.# செய்து பார்த்து விடடு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..

தேவையான பொருட்கள்:
======================
வெண்டைக்காய் - நான்கு
கத்தரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - மூன்று துண்டுகள்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு.
வெல்லம் - கோலிகுண்டு அளவு (விருப்பமென்றால்)
கறிவேப்பிலை - அரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்யில் வறுப்பதற்கு:
*******************************
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
தனியா - ஆறு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஆறு
வெந்தயம் -அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
அரைத்துகொள்ள:
-----------------------
தேங்காய் துருவல் - ஒரு கப்
சிறிய தக்காளி - இரண்டு
தேங்காய் மற்றும் தக்காளியுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து மேலே வறுக்ககொடுத்துள்ள வற்றை வறுத்து எல்லாத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுத்துவைக்கவும்.
(பி.கு.எண்ணெய்யில் வறுத்த பொருட்களை அரைக்க சேர்க்கும் பொழுது வறுத்தஎண்ணெய்யுடன் சேர்த்தே சேர்க்க வேண்டும்.வடிகட்ட கூடாது )
வேகவைக்க:
___________
துவரம் பருப்பு - ஒரு பெரிய கப்
பாசி பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தக்காளி - மூன்று துண்டுகள்
கறிவேப்பிலை - இரண்டு இலை
எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க:
..........................................................................
தனியா - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
கடைசியில் தாளிக்க:
---------------------------
தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவுமிளகாய் வற்றல் - இரண்டு
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
==========
* முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு வெடிக்கவிடவும்.
* நருக்கிய காய்கறிகளை போட்டு பெருங்காயம் போட்டு வதக்கவும்.
* உப்பு சேர்த்து ஒரு நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
* பின்பு புளியை ஒரு டம்பளர் நீரில் கரைத்து கடாயில் சேர்த்து காய்களை வேகவிடவும்.
* அரைக்க வேண்டியவற்றை வறுத்து அரைக்கவும்.
* காய்கள் வெந்து புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்துகுழம்பிற்கு தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்ததும் வேக வைத்துள்ள பருப்பு கலவையை நன்குமசித்து சாம்பாரில் சேர்த்து மேலும் தேவையான் அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
* பருப்பு சேர்த்ததும் ரொம்ப நேரம் கொதிக்க விட கூடாது..இரண்டு நிமிடத்தில்தணலை அனைத்து விடவும்.விருப்பப்பட்டால் சிறிது வெல்லம்சேர்க்கவும்.(வெல்லம் சேர்க்கும் பொழுது கவனமாக மிக சிறிய துண்டு மட்டுமேசேர்க்கவும்.இல்லையென்றால் இனிப்பாகிவிடும்.)
* பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை வேறு பாத்திரத்தில் தாளித்து சாம்பாரில்சேர்க்கவும்.
* எண்ணெய் இல்லாமல் வறுக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து நன்கு பொடித்துஅதை குழம்பில் இரண்டு டீஸ்பூன் தூவி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.கொத்தமல்லிதூவவும் .
* சுவையான சாம்பார் தயார்.
குறிப்பு:
======
இந்த முறையில் தான் கல்யாண வீடுகளில் மதியம் சாப்பாட்டிற்குசெய்கிறார்கள்..கொஞ்சம் அதிக வேலை தான்..ஆனால் சுவைத்து பார்க்கும் பொழுதுவேலை செய்த களைப்பு காணாமல் போய்விடும்...கண்டிப்பாக ஒரு முறை இப்படிசெய்து பாருங்க..
சூடான சாத்துடன் சிறிது நெய் சேர்த்து இந்த சாம்பாரை விட்டு பிசைந்துசாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.உங்களின் கருத்தை மறக்காமல்சொல்லிட்டு போங்க..