ஞாயிறு, 1 ஜூன், 2014

பிரட் ஹல்வா





தேவையான பொருட்கள்:
*****************************
நருக்கிய பிரட் துண்டுகள் - ஒரு கப்
பால் - ஒரு கப்
முந்திரி - பத்து
நெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்

செய்முறை:
**************

முதலில் பிரட் துண்டுகளில் பாலை விட்டு முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் 
ஊற வைத்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை ஹல்வா கிளரும் பாத்திரத்தில் விட்டு மிதமான 
தீயில் நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.சர்க்கரை சேர்த்து கிளறவும்.

சர்க்கரை கரைந்ததும் எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதி நெய்யை 
ஊற்றவும்.

எல்லாம் ஒன்று சேருமாறு கிளறவும்.நன்கு அழுத்தி தொடர்ந்து கிளறவும்
இல்லை என்றால் அடிபிடித்துவிடும்.

ஒரு நிமிடத்தில் மீதம் உள்ள நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி 
பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் வேண்டும் என்கிற வடிவத்தில் வைத்து 
பரிமாறவும்.

இந்த ஹல்வா எளிதில் தாயரித்து விடலாம்.மிக சுவையாக இருக்கும்.

செய்து பார்த்து விடடு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக