தேவையான பொருட்கள்:
=======================
தனியா - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - எட்டு(காரத்திற்கு தகுந்தார்ப்போல்)
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து (தேவைப்பட்டால்)
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
============
* ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவைத்து பருப்பு வகைகளை முதலில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
* பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆறவிடவும்.
* நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்து பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.
* மணக்கும் சாம்பார் பொடி தயார்..இதை பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க..
இந்த பொடியின் குறிப்பு ஒரு பிரபல உணவகத்திலிருந்து வாங்கியது..குழம்பு மிக சுவையுடன் வருகிறது..ஆகவே அனைவரும் ஒரு முறை இதே அளவில் பொருட்கள் சேர்த்து செய்து பாருங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக