திங்கள், 18 ஆகஸ்ட், 2014

புளி மிளகாய்







தேவையான பொருட்கள்:
=========================
பச்சை மிளகாய் - (சின்னது) இருபது (காரத்திற்கு தகுந்தாற்போல்)
புளி - ஒரு டேபிள்ஸ்பூன் 
நருக்கிய கொத்தமல்லி - ஒரு கப்
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெந்தயம் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்

செய்முறை:
============


*   பச்சை மிளகாய்,கொத்தமல்லி,புளி,உப்பு,இஞ்சி எல்லாத்தையும்
     ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டு கெட்டியாக மையாக அரைக்கவும்.
*   ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம்,பெருங்காயம்,மஞ்சள்
     தூள் தாளிக்கவும்.

*   அரைத்த விழுதை சேர்த்து தணலை சிம்மில் வைத்து எண்ணெய் கக்கும் வரை
     நன்கு கிளறவும்.

*    சுவையான புளி மிளகாய் தயார்.ஒரு பாட்டிலில்  இதனை போட்டு காற்று புகாமல்,தண்ணீர் படாமல்  மூடி வைத்தால்.ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க.. 

குறிப்பு:
=======


நான் இருபது மிளகாய் என்று கொடுத்திருப்பதற்கு காரணம் நான் இருக்கும் ஊரில் கிடைக்கும் மிளகாய்களில் காரம் இருக்காது என்பதால் தான்..தயவு செய்து காரம் உள்ள மிளகாய்களில் இருபது மிளகாய் சேர்த்து செய்து விட வேணாம்..நான் கொடுக்கும் அனைத்து குறிப்புகளிலுமே காரத்தை உங்களின் சாப்பாட்டு முறைக்கு ஏற்றாற்போல் போடுக்கொள்ளுங்கள்..நன்றி..

got your message hari :((( .. 

//பச்சை மிளகாய் - (சின்னது) இருபது (காரத்திற்கு தகுந்தாற்போல்)//

இப்படி கொடுத்துள்ளேன் ஹரி..குறிப்பை நன்றாக பாருங்கள் ஹரி..எதுவாக இருந்தாலும் பின்னூட்டத்திலேயே கொடுங்கள்:)))நன்றி.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக