புதன், 13 ஆகஸ்ட், 2014

குவிக் அண்ட் ஸ்பைசி மாங்காய் ஊறுகாய்



தேவையான பொருட்கள்:
=========================
நருக்கிய மாங்காய் துண்டுகள் - ஒரு கப்
ஊறுகாய் தூள் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கடுகு - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால்  டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========

* முதலில் ஊறுகாய் பொடி தயார் செய்து கொள்ளவும்.ஊறுகாய் பொடி செய்வதற்கு ஆறு மிளகாய் வற்றல் ,கால் டீஸ்பூன் பெருங்காயம்,கால் டீஸ்பூன் பூண்டு பொடி,நான்கு கறிவேப்பிலை இலை எல்லாத்தையும் மிக்சியில் பொடி பண்ணி கொள்ளவும்.(வறுக்க கூடாது)

* பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு,வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மீதம் இருக்கும் கடுகு சேர்த்து பொரிந்ததும் ஊறுகாய் பொடி சேர்த்து  வறுத்து மாங்காய் சேர்த்து ஒரு நொடி கிளறி
இறக்கவும்.
 

* பொடித்து வைத்துள்ள கடுகு வெந்தய பொடி கால் டீஸ்பூன் சேர்த்து கிளறவும்.சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி .

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக