
தேவையான பொருட்கள்:
*****************************
மைதா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
குக்கிங் சோடா - மூன்று சிட்டிகை
பச்சை மிளகாய் - இரண்டு(காரத்திர்க்கேர்ப்ப)
கொத்தமல்லி,கறிவேப்பிலை - மூன்று டீஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
தேங்காய் சில் - ஒரு டீஸ்பூன்(தேவைப்பட்டால்)
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான பொருட்கள்
செய்முறை:
**************
# மேலே கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை
எல்லாம் தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
# ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.(குறைந்தது கால் மணி நேரமாவது )
# எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி கலந்து வைத்துள்ள கலவையை
போண்டா போல் போட்டு பொரித்தெடுக்கவும்.
# சுவையான மங்களூர் போண்டா ரெடி.
# இதற்க்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி சூப்பர் காம்பினேஷன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக