வெள்ளி, 16 மே, 2014

அக்காரவடிசல்(கோவில்களில் செய்யும் முறை)




தேவையான பொருட்கள்:
***************************
தண்ணீர் சேர்க்காத பால் - நாற்பது டேபிள்ஸ்பூன்.
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - ஆறு டேபிள்ஸ்பூன்
வெல்லம் - மூன்று டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - இரண்டு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முத்திரி - நான்கு டீஸ்பூன்

செய்முறை:
*************

முதலில் அடுப்பில் பால் மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

@ நன்றாக கொதித்து வற்றி தக்காளி பதம் வந்ததும் மூன்று டேபிள்ஸ்பூன் நெய்மற்றும் வெல்லம்,சர்க்கரை,முந்திரி,பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம்நன்றாக கிளறவும்.

மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி கேசரி பதம் வதும் நெய் தடவிய
தட்டில் இட்டு சமமாக பரப்பி ஆறியதும் விருப்பத்திற்கேற்ப துண்டுகள்
போடவும்.

@ சுவையான அக்காரவடிசல் ரெடி.

குறிப்பு:
*********
பொதுவாக கோவில்களில் செய்யும் பொழுது துண்டுகள் போட மாட்டார்கள்அப்படியே சர்க்கரை பொங்கல் போல் தான் தருவார்கள்.நான் பார்ப்பதற்கு அழகாகஇருக்கும் என்பதால் துண்டுகள் போட்டுள்ளேன்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுகர் ப்ரீ போட்டும் செய்யலாம்.அல்லதுகருப்பட்டியிலும் செய்யலாம்.கருப்பட்டியில் செய்தால் சுவை சற்று வித்யாசப்படும்.

விருப்பபட்டால் பால் கொதிக்கும் பொழுது ஏதேனும் ஒரு கலர் சேர்த்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக