சனி, 3 மே, 2014

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (மதுரை பக்கம்)




தேவையான பொருட்கள்:
****************************
சின்ன கத்திரிக்காய் - ஐந்து
சின்ன வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - மூன்று
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - கால் டீஸ்பூன் (விருப்பபட்டால்)

வறுத்து பொடிக்க:
================
தனியா - ஆறு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ஐந்து டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - பதினொன்று (காரத்திற்கேற்ப)
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஜீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - மூன்று டீஸ்பூன் (விருப்பபட்டால்)

மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய்யில் வறுத்து நன்றாகபொடித்துக்கொள்ளவும்.காய்க்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

செய்முறை:
*************

@ புளியை மூன்று அல்லது நான்கு டம்பளர் நீரில் கெட்டியாக
கரைத்துக்கொள்ளவும்.

@ கத்தரிக்காயை முழுதாக வெட்டாமல் காம்பு வரை நான்கு பாகமாக
அறுத்துக்கொள்ளவும்.

@ கத்தரிக்காயுள் பொடித்த பொடியை நன்றாக அமுக்கி நிரப்பி வைக்கவும்.

@ நிரப்பியது போக மீதமுள்ள பொடியை புளியுடன் சேர்த்து கரைக்கவும்.

@ ஒரு கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு
பொரியவிடவும்.
@ பின்பு வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் ,பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பு
தணலை மீடியமில் வைத்து கத்தரிக்காயை வேக விடவும்.

@ வெந்ததும் புளி கரைசலை ஊற்றி உப்பு மற்றும்கொத்தமல்லி,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய்கக்க ஆரமித்ததும் தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.செய்து பார்த்து 
கருத்தை
 பகிர்ந்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக