வியாழன், 22 மே, 2014

பாகற்காய் பிட்லை



தேவையான பொருட்கள்:
----------------------------------

வேக வைக்க:
============
துவரம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
நிலக்கடலை - கால் கப்
எண்ணெயில் வறுத்து அரைக்க:
===========================
தனியா - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - அரை கைப்பிடி
உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் வத்தல் - ஏழு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் - அரை கப்
தக்காளி - இரண்டு

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மல்லி இலை - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - தாளிக்க
பாகற்காய் - ஒரு கப்(நறுக்கியது)

செய்முறை:
============
*முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை
தேங்காய் தக்காளி தவிர )இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து தேங்காய் ,தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

*பருப்புகளை குழைய வேக வைத்து எடுக்கவும்.

*வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சிறிது வெந்தயம் தாளித்துபாகற்காய் சேர்த்து உப்பு சேர்த்து புளி தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவையான் அளவு நீர் சேர்த்துநிலக்கடலை சேர்த்து கொதிக்க விடவும்.

*கொதி வந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி நுரைத்ததும் மல்லி இலைதூவி பரிமாறவும்.

*கடைசியில் விருப்பபட்டால் சிறிது தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில்கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
*சுவையான பிட்லை ரெடி

குறிப்பு:
=======
இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.இதற்க்கு பக்கஉணவாக பொரித்த அப்பளம் சூப்பராக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக